மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு
மேய்ச்சல்தரை மக்களுடைய போராட்டம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும், வடகிழக்கு
தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக முக்கியமான புள்ளி என்பதை
விளங்கி முஸ்லிம் மக்களது பங்களிப்பும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை பகுதியில் இருந்து சிங்கள குடியேற்றத்தை வெளியேற்ற கோரி பண்ணையாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 100 ஆவது நாள் போரட்டதினமான இன்று (23.12.2023)மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்கள மயப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டு மேச்சல் தரையான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை ஒட்டு மொத்தமாக சிங்கள மயப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கையாக பார்க்கின்றோம்.

இதற்கு முன்பாக திருகோணமலை, அம்பாறை தமிழர்களின் கைகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். அதில் மிஞ்சி இருந்தது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான்.
ஆனால் அந்த மாவட்டத்தை இன்று மிக தீவிரமாக வந்து சிங்கள மயப்படுத்துவதற்குரிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய வேலைத் திட்டத்தின் முக்கியமான அங்கமாக இந்த மயிலத்தமுடு மாதவனை மேச்சல் தரையில் பண்ணையாளர்களை அப்புறப்படுத்தி அந்த நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்றி சிங்கள குடியேற்றத்தை குடியேற்ற செயற்படுத்துக்கின்ற செயற்திட்டமாகும்.
பொருளாராத ரீதியாக அங்கு குடியேற்றப்படுகின்ற சிங்கள மக்களுக்குரிய அடிப்படை வசதிகளும் பொருளாராத ரீதியாக அவர்களை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இன்று நடைமுறையில் வந்து ஒரு முக்கியமான கட்டத்தை வந்தடைந்துள்ளது.
அபிவிருத்தி திட்டம்
சர்வதேச நிறுவனங்களின் நிதி பங்களிப்போடு மாதுறு ஓயா வலதுகரைவாய்க்கால் அபிவிருத்தி திட்டம் கனிசமான அளவிற்கு முன்னேறி அந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்காக சிங்கள குடும்பங்களை குடியேற்றங்களை கொண்டுவந்து அந்த அபிவிருத்தி திட்டம் ஊடாக அனைத்து நிலங்களையும் சிங்கள மயமாக்கும் திட்டம்தான் இன்று மேய்ச்சல் தரையில் இருந்து பண்ணையாளர்களை துரத்துகின்ற அவர்களது பொருளாதாரத்தை அழிக்கின்ற ஆரம்பகட்டமாக இருக்கின்றது.

ஆகவே இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் என்று நிரூபிக்க கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தை எக் காரணம் கொண்டும் இழக்க விடக்கூடாது. அந்தவகையில் சகோதர முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது இன்று மட்டக்களப்பை நாங்கள் கைவிட்டால் இதனை சிங்கள தேசம் ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்ககூடாது.
மேச்சல் தரையில் கால்வைத்து அதை சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கி திருகோணமலையில் சேருநுவரவில் நடைபெற்றவாறு குறியேற்றி எண்ணிக்கை வந்ததின் பிற்பாடு ஏனைய இடங்களில் நுழைவதற்கான அத்திவாரத்தை பொறுகின்ற வேலைத்திட்டமாகும்.
போர்காலத்தில் இலங்கை அரசுடன் நின்ற போதும் கூட பேர் முடிந்த கையுடன் குறிவைத்த இனம் முஸ்லிம் மக்கள். ஆகவே முஸ்லிம் மக்களும் விளங்கி கொள்ளவேண்டும்.
மொழி என்ற அடையாளம்
தமிழ் பேசும் மக்களுடைய வடகிழக்கு நிலப்பரப்பின் அடையாளத்தையும் மொழி என்ற அடிப்படையில் பாதுகாக்க தவறினால் அது முஸ்லிம் மக்களையும் சேர்த்து தான் அழிக்கும்.

எவ்வாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரைக்கும் முஸ்லிம் மக்களுடைய செயற்பாடுகளும் சேர்த்து உலகத்திற்கு வெளிக் கொண்டு வந்தது போன்று இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை மக்களுடைய இந்த போராட்டம் ஒட்டுமொத்தமாக இந்த தமிழர்களுடைய போராட்டமாகவும் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக மிக்கியமான புள்ளி என்பதை விளங்கி கொண்டு எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தில் பங்களிப்பு அவசியம்”என தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கால்நடை பண்ணையாளர்களின் அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டதுடன் கால்நடை பண்ணையாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
காவியுடைகொண்டு எங்களை நசுக்கவேண்டாம், ஆக்கிரமிப்பு சிறிலங்காவின் தேசிய கொள்கையா?, நாங்கள் வாய்பேசாத ஜீவன்கள் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்,அம்பாறை,திருகோணமலை போன்று மட்டக்களப்பில் வேண்டாம், மயிலத்தமடு,மாதவனை எங்கள் சொத்து போன்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

வடகிழக்கு தமிழர் தாயகம், வாழவிடுவாழவிடு எங்களை வாழவிடு, மயிலத்தமடு எங்களது நிலம், சுடாதே சுடாதே கால்நடைகளை சுடாதே போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
இதன்போது போராட்டம் நடைபெற்று நூறாவது நாளை குறிக்கும் வகையில் 100 என்ற தீப்பந்தம் செய்யப்பட்டு அதில் எரித்து தமது போராட்டத்தினை கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan