தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு!
முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
வழக்குகள்
சமூக செயற்பாட்டாளரும், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசு கட்சி நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினரும், வைத்தியர் சிவமோகன் தரப்பினரும் தம்முடைய பிரச்சினைகளை நேருக்கு நேர் கலந்துரையாடி அதற்கமைவாக இரு தரப்பினரும் ஒத்துழைத்து மக்கள் நலன் கருதி வைத்திய கலாநிதி சிவமோகனால் முறையிடப்பட்ட வழக்கினை மீள பெறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
