கோட்டாபய ஆட்சியில் வடக்கு, கிழக்கு குத்தகைக்கு!
பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சதகா பலோஸ் கூறினார் .சந்தர்ப்பவாதிகள் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி நெறிமுறைகள் ஒழுக்கங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைகிறார்கள் என்று.இலங்கையில் இனப்பிரச்சினைகள் வரும்போது, தெற்கில் உள்ள அரசியல்வாதிகள், ஒவ்வொரு அரசாங்கமும், இறையாண்மை ஒருமைப்பாடு குறித்து மிக இறுக்கமாக பேசுகின்றனர் என கட்டுரையாசிரியர் ச. வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியலில், இவை என்னவென்பதை அவர்கள் உண்மையில் புரிந்துகொள்கிறார்களா? இந்த இரண்டின் சுருக்கமான வரையறைகளை இங்கே கொடுக்கின்றேன். இறையாண்மை என்பது ஒரு பிரதேசத்திற்குள் உள்ள மிக உயர்ந்த அதிகாரம்,அரசியல் கோட்பாட்டில், மாநிலத்தின் முடிவெடுக்கும் செயல்பாட்டின் இறுதி மேற்பார்வையாளர் அல்லது அதிகாரம் மற்றும் ஒழுங்கு, சுயாதீன அதிகாரம் அல்லது அரசாங்கத்தில் அதிகாரம். ஒருமைப்பாடு என்பது நேர்மையாக இருப்பது மற்றும் வலுவான தார்மீக மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் மற்றும் மதிப்புகள், சீரான மற்றும் சமரசமான ஒத்துழைப்பைக் காண்பிக்கும் நடைமுறையாகும்.
நேர்மை என்பது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படும் வலுவான நெறிமுறைக் கொள்கைகள். நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவை ஒருமைப்பாட்டின் மையமாக உள்ளன என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ச. வி. கிருபாகரன் தனது கட்டரையில் குறிப்பிட்டுள்ளார்.
1948ம் ஆண்டு முதல், இலங்கை தீவின் சுதந்திரத்தை தொடர்ந்து - சர்வதேச சமூதாயம்,
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரசுகளுக்கிடையேயான அமைப்புகள்,
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் ஒவ்வொரு முறையும் அக்கறை
காட்டும் வேளையில், இலங்கை அரசாங்கங்களின் பதில் என்னவெனில், "எங்கள்
இறையாண்மை ஒருமைப்பாட்டில் தலையிட வேண்டாம்" அல்லது "எங்கள் உள்நாட்டு
விடயங்களில் தலையிட வேண்டாம்" என்பதாகும்.
சிங்கள பௌத்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தமிழீழ மக்களது சுயநிர்ணய உரிமை அல்லது அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கை என்பது, சிறிலங்காவின் இறையாண்மையை மீறுவதாக கூறுகின்றனர். இது அவர்களது ‘இறையாண்மை’ பற்றிய அரசியல் அறிவு.
தேசியவாதிகள் போலும் தேசபக்தர்களை போலும் பேசுபவர்கள் தான் நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மீறுபவர்கள். ராஜபக்சர்கள் உண்மையிலேயே இறையாண்மையை மதிக்கிறார்கள் ஆனால், அவர்கள் எவ்வாறு வெளிநாட்டு படைகளை இலங்கையில் இருக்க அனுமதிக்க முடியும்? அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சியளித்தது மட்டுமல்லாது, வான்வழி மூலோபாய குண்டு தாக்குதல்களையும், கடலோர இலக்குகளையும், நேரடி குண்டுவீச்சில் ஈடுபட்டதுடன், இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவை இறையாண்மை மீறல்களாக இவர்களிற்கு தெரிவதில்லையா? இவற்றை தான் “அரசியல் சந்தர்ப்பவாதம்” என அழைப்பார்கள். ராஜபக்சாக்கள் இலங்கையில் ஆட்சியாளர்களாக ஆனதிலிருந்து, அவர்களின் குடும்ப நிதி மற்றும் பொருளhதார நன்மைகள் கவனத்தில் கொண்டு, இலங்கையின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் முற்றிலும் மீறப்பட்டுள்ளன.
இன்று இலங்கையின் ஐந்தில் ஒரு பங்கு, மக்கள் சீனக் குடியரசில் இணைக்கப்பட்டுள்ளது. இது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 15,000 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பமாகியது.
2017ம் ஆண்டில் தொண்ணூற்றொன்பது (99) ஆண்டு குத்தகைக்கு முன்னளாள் ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஆகியோரால் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளனர்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சீனாவுக்கு எத்தனை தடவை சென்று வந்தார்கள் என்பதை ஆராய்ச்சி செய்பவர்களிற்கு இது நிச்சயம் புரியும். இலங்கையின் இறையாண்மை இன்று மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்பது வெளிப்படையான விடயம்.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சீன குடியரசின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர திட்டம், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிசேன ,ரணில் அரசாங்கத்தால், கொழும்பு சர்வதேச நிதி நகரம் என பெயர் மாற்றப்பட்டது.
இந்த துறைமுக நகரம் 269 கெக்டர் நிலத்தை உள்ளடக்கியது. இதில் இலங்கையின் பங்காக 125 கெக்டராகவும், 108 கெக்டர் சீனாவின் பங்காகவும் திகழும். இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கானது என ராஜபச்சக்களினால் சாட்டுபோக்கு கூறினாலும், இதனது லாபம் சீனாவிற்கே சென்றடையுமென பொருளாதார வல்லுநர்களால் நம்பப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகர மசோதாவின் விதிகள், "இலங்கையின் சட்ட மற்றும் அரசியல் இறையாண்மையை அழித்துவிடும்" என அரசியல்வாதிகள், சிவில் சமூக உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் பலரால் நம்பப்படுகிறது.
இந்த கொழும்பு துறைமுக நகரம், "தேசிய சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் வரம்புகளை மீறுவதுடன், நீதித்துறை நடவடிக்கைகளிற்கு அப்பாற்பட்டு, ஒரு ஆணைக்குழு மூலமாக கொழும்பு துறைமுக நகரத்தின் நன்மை தீமைகளை யாவும் முடிவு செய்யப்படவுள்ளது.
மிக சுருக்கமாக கூறுவதனால், இலங்கைதீவிற்குள் இன்னுமொரு நாடு உருவாகியுள்ளது. இவை யாவும் அரசியலமைப்பை, இறையாண்மை, தொழிலாளர் உரிமைகளை மீறுவதாக கொழும்பு துறைமுக நகர மசோதாவிற்கு எதிரானவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இது இலங்கை நாணய விதிமுறைகளிற்கு மாறாக - வெளிநாட்டு நாணயத்தில் மட்டுமே முதலீடுகளை செய்யப்படும். அதாவது இலங்கைதீவின் நாணயம் கொழும்பு துறைமுக நகரத்தில் செல்லுபடியற்றதாக காணப்படும். சகல சச்சரவுகளும் ஆணைகுழுவின் மத்தியஸ்தத்தின் மூலம் தீர்க்கப்படும்.
இலங்கை நீதிமன்றத்திற்கு இங்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசியவாதிகள், தேசபக்தர்கள், போரின் கதநாயகர்களாகவும், பெத்த மதத்தின் பாதுகாவலர்களாகவும் மண்ணின் மைந்தர்களாக, தங்களை கண்பித்த ராஜபக்சக்கள், தமது குடும்பத்தின் லாபத்திற்காக தமது மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். இப்போது எனது முக்கிய விடயத்திற்கு வருகிறேன்.
இலங்கைதீவின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரலாற்று பாரம்பரிய ரீதியாகவும், தமிழர்களின் தாயகமாகும். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. தமிழர்களின் தற்போதைய வடக்கு கிழக்கு மட்டுமல்லாது, புத்தளம் சிலாபம் ஆகிய பிரதேசங்களும் தமிழர்களின் வரலாற்று பிரதேசங்களே.
ராஜபக்சக்கள் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் புறக்கணித்து வரும் போக்கில், கூடிய விரைவில் வடக்கு கிழக்கையும் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.
இந்தியாவின் நீண்டகால அமைதியும், தைரியம் இன்மையும், இன்றைய நிலைக்கு முக்கிய காரணிகள். ராஜபக்ச குடும்பத்தினருக்கு எங்கள் வேண்டுகோள் என்னவெனில் - வடக்கு கிழக்கு நமது வரலாற்று பாரம்பரிய நிலமாக இருந்தாலும், அவர்களது குடும்ப பொருளாதார நிதி நன்மைகளைப் பற்றி இவர்கள் அக்கறை கொள்வதனாலும், இணக்கமான தீர்வின் அடிப்படையிலும், வடக்ககு கிழக்கு வாழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், இரத்த களரிகளை தவிர்க்கும் முகமாகவும், வடக்கு கிழக்கை சீனாவிடம் ஒப்படைப்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதற்கு முன்பு, அவர்கள் எங்கள் நிலத்தை எம்மிடம் மீண்டும் கையாளிப்பதற்கு எண்ண வேண்டும்.
தெற்கில் உள்ள மக்களை சமளிப்பதற்காக, அம்பந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் ஆகியவை குத்தகைக்கு கொடுத்தாக கூறி நியாயப்படுத்தியிருப்து போன்று, “வடக்கு கிழக்கை எம்மிடம் ஒப்படைத்த பின்னர், தொண்ணூற்றொன்பது (99) ஆண்டுகள் தமிழர்களிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறலாம்.
எங்கள் நிலம் எங்களுக்குத் மீண்டும் கையாளிப்பட்ட பின்னர், அவர்கள் என்ன சொன்னாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. சீனாவை தவிர்த்து, ஈழத்தமிழர்களாகிய எமக்கும் வடக்கு கிழக்கை கொடுப்பதில் பாரிய வேறுபாடுகளும் நன்மைகளும் உண்டு. முதலில், எதிர்காலத்தில் இரத்தக் களரிகள், படுகொலைகள், காணாமல் போபவர்கள் போன்ற சம்பவங்களை வடக்கு கிழக்கில் தவிர்த்து கொள்ளலாம்.
இரண்டாவதாக, தமிழ் சிங்களவர்களாகிய இரு இனத்தவர்களும், நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ முடியும். மூன்றாவதாக, ராஜபக்ச குடும்பத்திற்கான நன்கொடையான நிதியை கருத்தில் கொண்டு, சீனர்களால் இவர்கள் குடும்பத்திற்கு கொடுக்கக்கூடியதற்கு மூன்று நான்கு மடங்கு அதிகமாக நாம் நிச்சயமாக வழங்குவோம்.
நான்காவதாக, பெரும்பாலும் வறிய தொழிலாளர் வர்க்கத்திலிருந்தும், தெற்கின் கிராமங்களிலிருந்தும் படையில் இணைந்து, குழறுபடி அரசியல்வாதிகளின் வாழ்க்கைகாக, தமது உயிரை நீக்கும் இராணுவத்தினரின் இறப்புக்களை குறைக்க முடியும். ஐந்தாவதாக, வறிய தொழிலாளர் குடும்பங்களில் உயிர் பலியான இராணுவத்தினருக்காக நினைவு தூபிகளை தொடர்ந்து எழுப்பும் நிலையை தவிர்த்து கொள்ள முடியும்.
ராஜபக்க்ச குடும்பத்தினர்கள் வீதி வழியாக பயணம் செய்திருந்தால், தமிழீழ விடுதலை புலிகளுடனான போரில், தமது உயிரை கொடுத்துள்ள நூற்றுக்கணக்கான அல்ல ஆயிரக்கணக்கான இராணுவத்தினருக்கான நினைவுச்சின்னங்களை, பஸ் தரிப்புக்களாகவும், நினைவு தூபிகளாகவும் தூண்களாகவும் காண முடியும்.
எங்கள் நிலத்தை திருப்பி கொடுத்தால், அம்பாந்தோட்டை கொழும்பு துறைமுக நகரம் போன்றவற்றிற்கு சீனாவுடன் உள்ள ஒப்பந்தம் போல் அல்லாது, நாம் நிச்சயமாக குறைந்தது நான்கு ஐந்து ஆண்டு காலம், உங்கள் நாணயத்தைப் பயன்படுத்துவோம்.
மேலும் எமது உற்பத்திகளை இரு நட்பு அண்டை நாடுகளாக பரிமாறிக் கொள்ளலாம். இந்த யோசனைக்கு கோட்டபாய ஒப்புக் கொண்டால், அவருடைய குடும்ப நிதிக்கான ஒழுங்குகள் பற்றி அவர்களுடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் செய்யலாம்.
இந்த ஒப்பந்தம் – இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கான நீதிக்கான செயற்பாடுகளிற்கு அப்பால் இருக்க வேண்டும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்த்தோ, சமாளித்தோ செயற்படுத்த முடியாது. எமக்கிடையே ஏதேனும் சிறப்பு நிபந்தனை வேண்டுமானால், சிறப்பான நிதி சலுகையுடன், நட்பு ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் - ராஜபக்ச குடும்பத்தினர், நாட்டின் எதிர்காலத்திற்கு மேலாக, தங்கள் குடும்ப நிதி ஆதாயத்தைப் பற்றியே கவலைப்படுகின்றனர் என்பதை நிரூபித்துள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தினரின் பணத்திற்கான பலவீனத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள், முன்கூட்டியே அறிந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக ராஜபக்ச குடும்பத்தை சீனர்கள் கவனிப்பதற்கு மூன்று நான்கு மடங்கு மேலாக கவனித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஒர் ஆங்கில பழமொழி கூறுகிறது, “ஒருபோதும் இல்லாது இருப்பதை விட, தாமதமானாலும் பரவாயில்லை” என்பதற்கு அமைய, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் கோட்டபாய, எமது நிலத்தை எமக்கு மீண்டும் கையளிப்பது பற்றி சிந்திப்பதற்கு கால அவகாசம் உண்டு.
தெற்கு வாழ் மக்களிற்கு, எமக்கு வடக்கு கிழக்கை குத்தகைக்கு
கொடுத்துள்ளதாக கூறுங்கள். கோட்டபாய இதை செய்வதற்கு முன்வரும் பட்சத்தில், எங்கள்
பிரதேசங்களில் புத்தர் சிலைகளை எவ்வாறு கோட்டபாய எழுப்புகிறரோ, அதே
போன்று, கோட்டபாயவிற்கு
சிலைகள் வடக்கு, கிழக்கு தவிர்ந்த மற்றைய பகுதிகளில், எழுப்புவதற்கும்
ஒழுங்குகள் செய்வோம். “இனிமையான கனவு கோட்டபாய”! வாழும் வரை போராடுவோம்!போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
