கோவிட் மரணங்கள் தொடர்பில் மறைக்கப்படும் உண்மை என்ன? எதிர்க்கட்சி வெளிப்படுத்தும் விடயம்
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் மற்றும் தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றின் உண்மையான ஆபத்து நிலைமையை மக்கள் புரிந்துக்கொள்வதற்காக சரியான எண்ணிக்கையுடன் கூடிய புள்ளிவிபரங்களை வழங்குவது உதவியாக இருக்கும்.
இலங்கையில் நேற்றைய தினம் 101 பேர் இறந்ததாகவும் இது ஒரே நாளில் ஏற்பட்ட அதிகளவான மரணம் எனவும் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் ஏற்கனவே 100, 200 என மக்கள் இறப்பார்கள் என நாங்கள் கூறியிருந்தோம். மரணங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் போது கோவிட் தொடர்பில் மக்களுக்கு உள்ள அச்சம் நீங்கி விடும். உண்மையாக தகவல்களை வெளியிட்டால், மக்கள் அச்சத்தில் வீடுகளில் கிழக்கை அவித்து சாப்பிட்டு கொண்டாவது தம்மை தற்காத்து கொள்வார்கள்.
உண்மையை மறைக்கும் போது நிலைமை விபரீதமாக மாறும் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri