தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு
கடந்த 11 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை எனவும், அரசாங்கம் தற்போதைய தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்
2014 ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறாததை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக தேர்தல் தாமதமடைந்ததாக கூறியுள்ளது.
தற்போது இரு தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தேர்தல் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோருகிறது.
குறுங்கால சட்ட திருத்தம்
அத்துடன், பழைய முறைப்படி தேர்தல் நடத்த குறுங்கால சட்ட திருத்தம் மேற்கொள்ளவும், வேட்புமனுவில் பெண்களுக்கு 25% ஒதுக்கீட்டை சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
