ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க பரிந்துரை
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரிய சேவை
மேலும், ஆசிரிய சேவையில் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கான வழிக்காட்டி நூலில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவித்து அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனை ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டில் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
