யாழில் த.தே.ம.முன்னணியின் மகளிர் அணி தலைவி உள்ளிட்ட இருவர் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சற்குணதேவி இன்று (05.06.2023) அதிகாலை மருதங்கேணிப் பொலிஸாரால் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மற்றுமொருவர் கைது
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி மகளிர் அணித்தலைவி கைது செய்யப்பட்டுச் சில மணித்தியாலங்களில் மற்றுமொரு கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளதாகவும் சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பொலிஸார் சுட எத்தனித்ததை முதலில் கண்டு தெரியப்படுத்திய வடமராட்சியைச் சேர்ந்த உதயசிவமே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாகவும் அவர் காட்டம் வெளியிட்டுள்ளார்.










எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
