வடக்கில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்! சி.அ.யோதிலிங்கத்தின் நிலைப்பாடு
தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மகிழ்சியளிப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்றைய ஒப்பந்தத்தில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படையில் உள்ளடக்கிய ஒரு சமஷ்டி தீர்வு, உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணை வேண்டும், உட்பட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.
தமிழ் மக்களது ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் கையாழ்வதற்க்கு ஒருங்கிணைந்த அரசியல் முக்கியமானது.
இந்த ஒருங்கிணைந்த அரசியலில் பொது ஏதிரியை கையாளுவதற்கு இது எண்பதுவீதமான பங்களிப்பை செய்யக்கூடியது என்றும் மேலும் தெரிவித்தார்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam