ஜனாதிபதி தேர்தல் ஆதரவை உத்யோகபூர்வமாக அறிவித்த தமிழரசுக் கட்சி!
புதிய இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முகமாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் தற்போது நடைபெற்று வருகிறது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன், எஸ்.குகதாசன், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாவைசேனாதிராஜா
இதேவேளை கூட்டம் 11 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்றையகூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
