தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் (video)
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (28.12.2022) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் வாலிப முன்னணி தலைவர் ஆகியோரால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரச அறிவியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஆறுமுகம் யோகராசா நினைவுப்பேருரை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் மதத்தலைவர்கள், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






