அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! வெளிவந்த தகவல்
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இரா.சம்பந்தனுக்கு பின்னர் வரப்போன்ற கூட்டுத்தலைமையானது, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை கொண்டதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எமது செய்திசேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுதத வரையில், அது இன்று இலங்கை தமிழர்கள் சார்பில் பேசவல்ல, சர்வதேசம் ஏற்றுக்கொண்ட கட்சியாக செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆர்.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர், கூட்டமைப்பு பலமிக்கதாக செயற்படவேண்டுமானால் கூட்டுத்தலைமைகளே காத்திரமான முடிவாக அமையும் என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த, எதிர்காலத்தில் இலங்கையின் தமிழ் பேசும் அனைத்து தேசிய இனப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு செயற்படும் தேசியக் கட்சியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதுவே எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர் இருப்பை உறுதிப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan