அவசரகால சட்டத்தை உடன் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri