ஆழ்கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி! இறந்தவர்களின் உடல்களை மீட்க முடியுமா...!
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக புறப்பட்டு சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்திருந்தது.
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கியில் பயணித்து, உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்படுமா என்பது குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உடல்களை மீட்பது சாத்தியமில்லை
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "ஆழ்கடலில் நீருக்கடியில் தரைப்பரப்பு மிகவும் சிக்கலாக இருக்கிறது.
ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் 5 பேரின் உடல்களை மீட்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தடய மரபணுவியல் துறை பேராசிரியர் டென்னிஸ் கோர்ட் கூறுகையில், ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கி வெடித்த இடத்திற்கு உடனே சென்று உடல்களை அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் என கூறியுள்ளார்.
மிக அதிக அழுத்தம் காரணமாக சிறிய நீர்மூழ்கிக் கப்பல் சுருங்கி வெடித்திருப்பதால், அதில் பயணித்து இறந்தவர்களின் உடல்களை அங்கிருந்து கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
உடனடியாக இறந்திருப்பார்கள்
நீர்மூழ்கியில் இருந்தவர்கள் வெடிப்பில் உடனடியாக இறந்திருப்பார்கள் என்று அமெரிக்க கடற்படையின் முன்னாள் மருத்துவர் டேல் மோல் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு தங்களுக்கு பிரச்சினை இருப்பது கூட தெரிந்திருக்காது என்று அவர் கூறினார்.
இது வெடிப்பாக இல்லாமல் உள்ளேயே சிக்கியிருப்பது மோசமானதாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நீர்மூழ்கி கப்பலில், பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான்-பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் துணை இயக்குனரான OceanGate Expeditions-ன் CEO ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
