ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊவா கேப்பிட்டல் கூட்டுறவு வங்கியில் (Uva Capital Co-operative Bank) நிகழ்ந்த சில முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை
இருப்பினும், நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அவரை மற்றொரு திகதியில் மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
YOU MAY LIKE THIS..
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri