நிறைவேற்றப்பட்ட புதிய நிதிச் சட்டம் தொடர்பில் எச்சரிக்கை
2021 செப்டெம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய நிதிச் சட்டம் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல், தமது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
இத்தகைய முயற்சிகளை எதிர்கொள்ள அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்த பொது மன்னிப்பு திட்டம் பணமோசடி நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய சட்டம் குறித்து கருத்துரைத்துள்ள ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் நடிசானி பெரேரா, நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை புரிந்து கொள்கின்ற போதும், அந்நிய செலாவணி தேவை என்பதற்காக இத்தகைய பரந்த அளவிலான பொது மன்னிப்பை நாடுவது கறுப்புப் பணத்தை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இலங்கை, இறுதியில் தவறான வருமானங்களுக்கான ஒரு புகலிடமாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே சட்ட அமுலாக்க மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் இந்த வரி பொது மன்னிப்பு, நாட்டிற்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri