வவுனியாவில் தப்பிச் சென்ற கனரக வாகனம்: பெண் படுகாயம்
வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தை சாரதி நிறுத்தாமல் சென்றுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா தினச்சந்தை கட்டடத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவைக்கு அருகில் நேற்று (16.09) இரவு 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த பெண் புறப்படுவதற்கு தயாராக வீதியின் கரையில் நின்றுள்ளார்.
பெண் படுகாயம்
இதன்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து ஹொறவப்பொத்தானை திசை நோக்கி சென்ற டிப்பர் வாகனம் அவரை மோதியுள்ளது.
விபத்தில் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமடைந்திருந்தார்.
விபத்தை ஏற்படுத்திய மஞ்சள் வர்ண கனரக வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




