மண் ஏற்றி சென்ற டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் மீட்பு - 8 சாரதிகள் கைது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் சட்ட விரோதமான முறையிலும்,அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் மற்றும் ஐந்து உழவு இயந்திரங்கள் இலுப்பை கடவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, எட்டு சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் பொலிஸார் மணலுடன் கைப்பற்றியுள்ளதோடு, டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களின் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, அன்றைய தினம் குறித்த 8 சாரதிகளும் மன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.




Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri