வெளிநாட்டு பிரஜையிடம் பண மோசடி செய்த சுற்றுலா வழிகாட்டி கைது
பெந்தர பிரதேசத்தில் ஜெர்மன் நாட்டவர் ஒருவரிடம் இருந்து 25 மில்லியன் ரூபாவுக்கும் மேல் ஏமாற்றிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(6.6.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ஜெர்மன் நாட்டவர் கொடுத்த பணத்தை சந்தேக நபர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
கைது
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
[0RWYENஸ
கைது செய்யப்பட்டவர், பெந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது சுற்றுலா வழிகாட்டியொருவர் என்று தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri