பலத்த காற்று தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை (8) 03.30 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கி.மீ வேகத்தில் 40-50 வரை காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri