ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம்..!
இலங்கையில் வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் வரி வீதங்களை உயர்த்துவதையும் புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், வரி செலுத்தாத முறைசாரா பொருளாதாரத்தை முறைசார் பொருளாதாரமாக மாற்றவும், வரி தளத்தை விரிவாக்கவும் அரசாங்கம் தவறிவிட்டதாககொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
வாகனம் வாங்குதல், காணி வாங்குதல் அல்லது வங்கி கணக்கு திறத்தல் போன்ற சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்படுவது நியாயமானது.
ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இதை கட்டாயமாக்குவது, வரி செலுத்தாத பாடசாலை மாணவர்கள் போன்றவர்களுக்கு எந்தப் பயனும் தராது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முறைசாரா பொருளாதாரத்தை முறைசார் பொருளாதாரமாக மாற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல், மீண்டும் மீண்டும் ஏற்கனவே வரி செலுத்தும் மக்களைத் துன்புறுத்துவதாக அரசு செயல்படுகிறது.
இலங்கையில் வங்கி கணக்கு அல்லது சொத்து வைத்திருக்கும் புலம்பெயர் இலங்கையர்கள், எதிர்காலத்தில் வங்கிப் பரிவர்த்தனைகளைச் மேற்கொள்ளும் போது TIN இலக்கத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposits) விதிக்கப்படும் வட்டி மீதான வரி (Withholding Tax) 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரிச் சிக்கலைத் தீர்க்க வெறும் TIN இலக்கத்தை மட்டும் கட்டாயப்படுத்துவது போதாது.
அதற்கு மாறாக இந்தியாவைப் போல டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதும், ஊழலை ஒழிப்பதும், பொருளாதாரத்தை முறைமைக்குள் கொண்டுவருவதுமே நிலையான தீர்வாக இருக்கும் என்று பேராசிரியர் வலியுறுத்துகிறார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam