அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கு இடமளிக்காது தேர்தல் தினத்தை அறிவிக்க வேண்டும்! ஜே.வி.பி கோரிக்கை
அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்களுக்கு இடமளிக்காது தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
வெகு விரைவில் தேர்தலை நடாத்துவது குறித்து இன்றைய தினம் தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நிதி தொடர்பில் எழுந்த பிரச்சினை
தேர்தலுக்கான நிதி தொடர்பில் எழுந்த பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் தீர்வு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே துரித கதியில் தேர்தல் தினத்தை நிர்ணயிப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளரையோ அல்லது அரச அர்ச்சகரையோ அழைத்து தேர்தல் திகதி பற்றி கேட்க அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




