நல்லூர் ஆலயத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, ஒரு விசமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
