டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்
பொகவந்தலாவ - டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 31ஆம் திகதி இந்த மாணவர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்
இந்த அமர்வில் கலந்து கொண்ட மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் தங்களது பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும், தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அத்துடன், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் செயற்றிட்டத்தில் மாணவர் நாடாளுமன்றத்தின் முக்கிய பங்குகள், நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், மாணவர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதன்போது, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, பாடசாலை அதிபர் பொன் பிரபாகரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, சிறந்த பேச்சாற்றலும், ஆளுமையும் மிக்க சிறந்த மாணவர் நாடாளுமன்றத் தலைவர்களை சந்தித்தமைக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த நான்கு வருடங்களாக பாடசாலை மட்டத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்த நிலையில், நோர்வூட் பிரதேச தவிசாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

104 வருட வரலாற்றைக் கொண்ட பொகவந்தலாவ டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம், இதுவரையான நாட்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பட்டதாரிகளையும் கல்விமான்களையும், சிறந்த எதிர்கால பிரஜைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது.
பொகவந்தலாவ - டியன்சின் நகரத்தை அண்மித்த பல தோட்டங்களிலும் இருக்கும் மாணவர்கள், ஒரே கூரையின் கீழ் கல்வி கற்கும் பாடசாலையாக டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம் விளங்குவதுடன், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்டத் துறைகளிலும் பாடசாலை சிறந்து விளங்குகின்றது.
அகில இலங்கை ரீதியில் நடைபெறும், போட்டிப் பரீட்சைகள், தமிழ்த் தினப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வரும் பாடசாலை மாணவர்கள், “குன்றின் மேல் அமைந்துள்ள எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்” என்ற உயர் குறிக்கோளோடு மேல் நோக்கிப் பயணிக்கின்றனர்.
























கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri