முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பின் நிலை தடுமாறும் புலனாய்வுதுறை
வவுனியாவில் நினைவெழுச்சி செய்வதற்கான மேடையை தயார்படுத்த முற்பட்ட போது உடனடியாக புலனாய்வுதுறையினர் அங்கிருந்தவர்களை கைது செய்து விட்டு பின்னர் அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டலாம் என யோசித்துள்ளனர் என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை புலனாய்வுதுறை தமிழர்களை எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அனைத்துலக சர்வதேச ஊடகங்களும் தமிழ் மக்கள் மீது பார்வையை திருப்பியுள்ளார்கள் என்பதை இலங்கை புலனாய்வுதுறை அறிந்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு....
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri