ஹல்லொலுவ மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அம்பலப்படுத்திய பொலிஸ் மா அதிபர்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்றுப்ப பணிப்பாளர்களில் ஒருவரான துசித ஹல்லொலுவ மீத நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களை பொலிஸ் மா அதிபர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு ஹல்லொலுவவினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றிற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகள் காரணமாக இந்த விடயம் பற்றிய மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துசித ஹல்லொலுவ முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு குறித்த விசாரணைகளின் அடிப்படையில் ஹல்லொலுவ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
