இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில் இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால்
ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
