கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான இடி மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடையிடையே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது, இந்தப் பகுதிகளில் தற்காலிகமாக கடுமையான காற்று வீச வாய்ப்புள்ளது.
இடி மின்னலால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri