100 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் வழங்கிய திரிபோஷ
இலங்கை திரிபோஷ நிறுவனம் தனது இலாபப் பங்காக 100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
இந்நிதிக்கான காசோலையானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிடம், திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
மிகவும் பாதுகாப்பான சேவை
இந்த நிகழ்வில் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்து கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, "திரிபோஷ நிறுவனம் மூடப்படவுள்ளதாகச் சில தரப்பினர் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் சரியான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, இந்த நிறுவனம் மிகவும் பாதுகாப்பான சேவையை வழங்கி வருகிறது" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri