தேவிபுரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முதன்மை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதி ஓரமாக நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட முப்புர வட்டாரத்தில் தேவிபுரம் பிரதான வீதியில் கடும் மழை மற்றும் காற்று காரணமாக வீதி ஓரத்திலே நின்ற மரம் ஒன்று வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து மரத்தினை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.



தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri