கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் பலி
குடாவெல்ல கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டநிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏனைய இரு இளைஞர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
மாத்தறை, கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் தொழில்புரியும் மூவரும் குடுவெல்ல ஹும்மான ஊதுகுழலியை பார்வையிட வந்த நிலையில் கடலில் நீராட சென்றுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
இந்நிலையில், இளைஞர்கள் மூவரும் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிமடை பொரகஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கடலில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |