முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
புதிய இணைப்பு
பார்வையிட்ட நீதிபதி
நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரில் சென்று இன்று (31.03.2025) மாலை பார்வையிட்டிருந்தார்.
அதனையடுத்து சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.
முதல் இணைப்பு
முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் இன்றையதினம் (31.03.2025) கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.
குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்பு
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடையஇரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 வயதுடைய மற்றைய யுவதியொருவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா என தெரியவந்துள்ளது. வாகனத்தையும் , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





