ஹட்டனில் அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிவேகமாகச் சென்ற முச்சக்கரவண்டி சாலையில் கவிழ்ந்ததில், இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (01) காலை சுமார் 6 மணியளவில், ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான சாலையில் உள்ள பொகவந்தலாவ வத்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும், வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த பெண்ணும் விபத்தில் பலத்த காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த பெண் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் வேகத்தை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது. பொகவந்தலாவ பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.