யாழ். மீசாலையில் தொடருந்து விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்!
மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று இன்று(08.01.2026) காலை முச்சக்கர வண்டி சாரதிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த பகுதியில் தொடருந்து வந்துகொண்டிருக்கும் போது கூலர் வாகனமொன்று தொடருந்து கடவையை கடக்க முற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
இதுவரை எந்த நடவடிக்கையும்
இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக செயற்பட்டு கூலர் வாகனத்தை மறித்துள்ளனர்.
இதன்போது தொடருந்தும் அந்நேரத்தில் பயணித்துள்ளது. இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பாக தொடருந்து திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தொடருந்து விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் இடம்பெற்றும் தொடருந்து திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம்: மின் தடை ஏற்படலாம் - கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |