திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு!
திருகோணமலையில் ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் கெப் வாகனம் மற்றும் முற்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்றிரவு 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிப் பயணித்த கெப் வாகனமும், மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாகவும், அவர் திருகோணமலை சங்கமம் பகுதியைச் சேர்ந்த துறைமுக அதிகார சபையில் கடமையாற்றி வந்த அப்துல் ரஹீம் அப்துல் கலாம் (60 வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதைவேளை முச்சக்கரவண்டியில் பயணித்த மொரவெவ விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் கே.ஜீ.எப்.எப்.ஜயசிங்க (26வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri