பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து! சிறுவன் பலி
பேருந்து ஒன்றுடன் மோதி முச்சக்கர வண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு(05.01.2025) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது .
புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே மேற்கண்டவாறு விபத்துக்குள்ளாகி, அதன் பின்னிருக்கையில் பயணித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
வீதியின் குறுக்காக ஓடிய நாயொன்றுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில், முச்சக்கர வண்டி கவிழ்ந்து, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் காயமடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். சிலாபம், வெலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், முச்சக்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |