முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு: வெளியானது அறிவிப்பு
முச்சக்கரவண்டி கட்டணத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கட்டணங்கள் அதிகரிப்பு
அதன்படி, முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 120 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 100 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கரவண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 90 ரூபாவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் மீட்டர் முச்சக்கரவண்டிகள் முதல் கிலோ மீட்டருக்கு 120 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 100 ரூபா என கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பொது மக்களுக்கான அறிவிப்பு
பொதுமக்கள் தமது பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கிலோமீட்டர் கட்டணத்தை அறிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும்,நாட்டில் முச்சக்கரவண்டிகளை இயக்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மீட்டர் இல்லாத அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்து அவற்றின் செயற்பாட்டிற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கம் உத்தேசித்துள்ளது”என தெரிவித்துள்ளார்.