முச்சக்கரவண்டி கட்டணக் குறைப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு
முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீட்டர் பெட்ரோல் வழங்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு தம்மால் நிவாரணங்களை வழங்க முடியாது என்று முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முச்சக்கரவண்டி பயணிகளுக்கான முதல் கிலோமீற்றர் கட்டணத்தில் 20 ரூபாவை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 5 லீட்டர் பெட்ரோல் அளவை 10 லீட்டராக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முச்சக்கரவண்டி பயணக் கட்டணக் குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி முச்சக்கரவண்டிகளின் முதலாவது கிலோமீட்டர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்தே கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஒதுக்கீடு அதிகரிப்பு
இதுவரை முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது.
எனினும் அதனை இரட்டிப்பாக்குவதாக அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தது.
அத்துடன் இது முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
