வடக்கு முதலமைச்சர் தெரிவில் மும்முனைப் போட்டி..!
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய - கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் நீதியரசர் இளஞ்செழியனின் பெயர்கள் முதலமைச்சர் வேட்பாளர்கள் பெயர்களாக உச்சரிக்கப்படுகின்றன.
பல அரசியல் கட்சிகள் முன்னாள் நீதியரசர் இளஞ்செழியனை எதிர்கின்றனர், இவரும் மற்றுமொரு விக்னேஸ்வரராக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் முதலமைச்சர் வேட்பாளராக வருவாரா என்று தனக்கு தெரியாது வந்தாலும் ஆட்சேபனை எதுவும் இல்லையென்றுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,