ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற பலரின் புகைப்படங்கள் ஜே.கே பாயின் தொலைப்பேசியில்..
நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாளஉலக குழுவினருக்கு மொரீஷியஸ் கடவூச்சீட்டை தயாரிப்பதில் கை தேர்ந்தவராக ஜே.கே பாய் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஆட்கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 மில்லியன் பணம்
குறித்த மொரீஷியஸ் கடவூச்சீட்டுக்கள் துருக்கியில் தயாரிக்கப்படுவதாகவும், அதற்காக 1 மில்லியன் மற்றும் அதற்கு மேலதிகமாக பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஜே.கே பாயின் தொலைப்பேசியின் அடிப்படையில் அவர் 20ற்கும் மேற்பட்ட கடவூச்சீட்டுக்களை தயாரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜே.கே பாயின் தொலைப்பேசியில் காணப்படும் புகைப்படங்களைில் உள்ள சிலர், ஐரோப்பிய நாடுகளில் இறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.