ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26,29,40 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் ஹபீப் நகர், ஹைரியாநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவர்கள் மூவரிடமிருந்தும் 2 கிராம் 400 மில்லி கிராம், 2 கிராம் 250 மில்லி கிராம், 2 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஐந்து கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
