கப்பம் பெற முயற்சித்த விமானப்படையை சேர்ந்த மூவர் கைது
புத்தளம் - கற்பிட்டி, கல்குடா பிரதேசத்தில் இரண்டு பேரிடம் ஒரு இலட்சம் ரூபாய் கப்பம் பெற முயற்சித்த, விமானப்படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் பாலாவி விமானப்படை முகாமில் கடமையாற்றும் விமானப்படை சிப்பாய்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அடையாளம் காணும் அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே மோட்டார்சைக்கிளில் சென்று பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவர் கடவத்தை எண்டேரமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டு, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் என்பவற்றை கைப்பற்றியதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.



