புதிய கட்சிகளை பதிவு செய்த மூன்று அரசியல் தலைவர்கள்
மூன்று புதிய அரசியல் கட்சிளை பதிவு செய்ய அனுமதி வழங்கியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara welgama) தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர மலையக அரசியல் கட்சிகளை கொண்ட மனோ கணேசன் (Mano Ganeshan) தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்சிகளுடன் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri