மாத்தளையில் கோர விபத்து: வெளியான தகவல்
புதிய இணைப்பு
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் இன்று மாலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் வாடகைப் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பொலிஸ் பிரிவில் தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எளவாகந்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் எதிர்த்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விபத்தினையடுத்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து, அதில் பயணித்த 37 பேரும், வான் வண்டியில் இருந்த 05 பேரும் காயமடைந்து வில்கமுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்த இருவரும், வேனில் பயணித்த ஒருவரும் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் போது பேரூந்தில் பயணித்த மேலும் 39 பேர் விபத்தின் காரணமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
