யாழில் பெண்களை குறிவைத்த சம்பவம் : மேலும் மூவர் கைது
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (02.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
மேலும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்தது.
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம்
இதற்கமைய பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக கிராபிக் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து கடந்த ஜுன் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில், மூவர் கைது செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
