மானிப்பாயில் வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது
மானிப்பாயில் வீதியில் வைத்து ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நேற்று (05.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனை
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேகநபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கைகள்
சந்தேகநபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
