ரஷ்ய கப்பலைத் தாக்கிய அமெரிக்கா: மிகப்பெரிய போரின் அறிகுறி!
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் யுத்தம் ஆரம்பமாகிவிடும் என்று அச்சப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் வடஅட்லாண்டிக் கடலில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெயை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி, ரஷ்யக் கொடியின் கீழ் பயணித்த ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
முன்னர் பெல்லா 1 (Bella 1) என அழைக்கப்பட்ட, தற்போது மரினேரா (Marinera) என பெயர் மாற்றம் பெற்ற அந்தக் கப்பல், கடந்த மாதம் கரீபியக் கடலில் அமெரிக்கப் படைகள் அதில் ஏற முயன்றதைத் தொடர்ந்து, வட அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இரண்டு நாட்டு வல்லரசுகள் ஒன்றையொன்று கடலில் சந்தித்துக்கொண்ட தருணம் அது. பயங்கரமான உலகயுத்தம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச நிலை உருவாகிய தருணமாக அது காணப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...