ரஸ்யாவை மீண்டும் சீண்டும் அமெரிக்கா! பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்
அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெயை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி, ரஷ்யக் கொடியின் கீழ் பயணித்த ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
முன்னர் பெல்லா 1 (Bella 1) என அழைக்கப்பட்ட, தற்போது மரினேரா (Marinera) என பெயர் மாற்றம் பெற்ற அந்தக் கப்பல், கடந்த மாதம் கரீபியக் கடலில் அமெரிக்கப் படைகள் அதில் ஏற முயன்றதைத் தொடர்ந்து, வட அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அமெரிக்கா பறிமுதல்
அந்தக் கப்பல் “பொய்யான கொடியை ஏற்றிச் சென்றதால் நாடற்றதாக (stateless) அறிவிக்கப்பட்டது” என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஆனால், கிறிஸ்துமஸ் ஈவ் நாளில் அந்தக் கப்பலுக்கு “ரஷ்ய கூட்டமைப்பின் அரசு கொடியின் கீழ் பயணிக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தது” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
“மற்ற நாடுகளின் அதிகார வரம்பில் முறையாக பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிராக வலிமையைப் பயன்படுத்த எந்த நாட்டுக்கும் உரிமையில்லை” என்று கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய இராச்சியப் படைகள் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கின.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan