இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தன்று தப்பிச் சென்ற கைதிகள்! மீண்டும் கைது
இங்கிலாந்தின் சவுத் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள லெய்ஹில் (Leyhill) திறந்தவெளி சிறையிலிருந்து புத்தாண்டு தினத்தன்று தப்பிச் சென்ற இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 35 வயதான மேத்யூ ஆம்ஸ்ட்ராங், வார்விக்ஷையரில் உள்ள ரயில் நிலையம் அருகே பிடிபட்டார்.
கைதிகள் கைது
வன்முறை வழக்குகளில் தொடர்புடைய 40 வயதான டேனியல் வாஷ்போர்ன் என்பவர் பிரிஸ்டல் நகரின் மையப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து தப்பிப்பதற்கு முந்தைய இரவு, ஆம்ஸ்ட்ராங் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் கைபேசியை திருடியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் மீது கொள்ளை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தப்பிச் சென்ற மூன்றாவது நபர் ஏற்கனவே கடந்த ஜனவரி 3-ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தப்பியோடிய அனைத்து கைதிகளும் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan