சஜித்தை இயக்கும் மூன்று பேர் - பரபரப்பாகும் கொழும்பு அரசியல்
தென்னிலங்கை அரசியலில் மீண்டும் கட்சி தாவும் படலம் ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 உறுப்பினர்கள் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமானவர்களின் செயற்பாடுகளின் காரணமாகவே இந்த 10 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமகால அரசாங்கத்திற்கு தொடர்புடைய நபர் ஒருவரும், பெண் ஒருவரும் மற்றுமொரு நபர் ஒருவருமே இவ்வாறு சஜித் பிரேமதாஸவை இயக்குவதாக இந்த 10 பேர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே தாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக குறித்த 10 பேரும் குறிப்பிட்டுள்ளார்கள் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri