கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது:ஒருவர் காலிமுகத்திடல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்
வர்த்தகர் ஒருவரின கழுத்தை நெறித்து, அவரிடம் இருந்த பையை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பையில் பணம் இருக்கும் என்று எண்ணி அதனை கொள்ளையிட்டதாக சந்தேக நபர்கள் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நபர்
இந்த சந்தேக நபர்களில் ஒருவர் காலிமுகத்திடல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றமை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார மற்றும் மொறட்டுவை மேயரின் வீட்டின் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
